MARC காட்சி

Back
மணலூர் முனியாண்டி கோயில்
245 : _ _ |a மணலூர் முனியாண்டி கோயில் -
246 : _ _ |a முனியாண்டி கோயில்
520 : _ _ |a மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 29 கிமீ தொலைவிலும் மணலூர் கிராமம் அமைந்துள்ளது. மணலூர் ஒரு தொல்லியல் சான்றுகளைக் கொண்ட வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பழைய ஊராகும். மணலூரில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் அகழாய்வு நடத்தப்பெற்று, இவ்வூர் சங்க காலத்திலிருந்தே மக்கள் வாழ்ந்த ஊராக இவ்வகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள முனியாண்டி கோயில் இக்கிராம மக்களுக்கு காவல் தெய்வமாகவும், பல குடும்பத்தினருக்கு குலதெய்வமாகவும், ஊர் தெய்வமாகவும் விளங்குகிறது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், காவல் தெய்வங்கள், மணலூர் முனியாண்டி கோயில், முனீசுவரன், முனீஸ்வரன், முனி, முனியப்பன், முனிச்சாமி, மணலூர், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a தினேஷ்குமார் ரமேஷ்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு/நாயக்கர் காலம்
909 : _ _ |a 5
910 : _ _ |a முனீசுவரர்களுக்கு உருவம் அமைத்தல் மிகவும் அரிது. இங்கு முனியாண்டி தெய்வத்திற்கு உருவ வழிபாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
914 : _ _ |a 9.8658408
915 : _ _ |a 78.2115216
923 : _ _ |a வைகை ஆறு
925 : _ _ |a இருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a முனீசுவரர் பிரம்மாண்டமாக பெரிய அளவில் சுமார் 12 அடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன், நின்ற நிலையில், கையில் கதாயுதத்தை ஓங்கியபடி உக்கிரமாக காட்சியளிக்கிறார்.
930 : _ _ |a மணலூர் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். நீர்நிலை காக்கும் தெய்வமாக முனீசுவரர் இங்கு வழிபடப்பெற்றுள்ளார்.
932 : _ _ |a இக்கோயில் திறந்த வெளியில், இயற்கை எழில் கொஞ்சும் வைகைஆற்றின் நீர்நிலையின் கரையில் முனீசுவரர் கோயில் அமைந்துள்ளது. பெரும்பாலும் நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் திறந்த வெளிகளிலேயே, மேற்கூரையற்ற நிலையில் அமைக்கப்படுகின்றன. பிரபஞ்ச சக்திகளே இத்தெய்வங்களின் மூலசக்தியாக அமைவதாகக் கருதப்பட்டு இங்ஙனம் கோயில் கட்டிடம் இன்றி வழிபாடு நடைபெறுகிறது. அத்தகைய நிலையிலேயே மணலூரில் அமைந்துள்ள முனீசுவரர் வழிபாடும் நடைபெறுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
933 : _ _ |a ஊர் நிர்வாகம்
934 : _ _ |a மணலூர் மாந்தையம்மன் கோயில், மணலூர் அகழாய்விடம்
935 : _ _ |a மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் மணலூர் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a மணலூர்
938 : _ _ |a திருப்புவனம்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a திருப்புவனம் வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00429
barcode : TVA_TEM_00429
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover :
Primary File :

TVA_TEM_00429/TVA_TEM_00429_மதுரை_மணலூர்_மணலூர்-முனியாண்டி-கோயில்-0001.jpg

TVA_TEM_00429/TVA_TEM_00429_மதுரை_மணலூர்_மணலூர்-முனியாண்டி-கோயில்-0002.jpg

TVA_TEM_00429/TVA_TEM_00429_மதுரை_மணலூர்_மணலூர்-முனியாண்டி-கோயில்-0003.jpg

TVA_TEM_00429/TVA_TEM_00429_மதுரை_மணலூர்_மணலூர்-முனியாண்டி-கோயில்-0004.jpg